1 கோடி ரூபாய்க்கு மொபைல் பில்

அமெரிக்கா, ஏப்ரல் 24-

சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிய வயதான ஜோடிக்கு 1 கோடி ரூபாய்க்கும் மேல் மொபைல் பில் வந்திருந்தது. இது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் ரெனே ரெமண்ட் – லிண்டா தம்பதியர். ரெமண்டுக்கு வயது 71, லிண்டாவுக்கு வயது 65. இந்த வயதான அமெரிக்க ஜோடி தங்களின் முதுமையை இனிமையாக கொண்டாட சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அமைதியான சூழலில் தங்களின் பயணத்தை கொண்டாட நினைத்தவர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி பின்னாடியே காத்திருந்தது எனலாம். 

அதாவது, ரெமண்ட் அமெரிக்காவில் இருந்து சுவிட்சர்லாந்து சென்றிருந்தபோது அவர் பயன்படுத்திய மொபைல் டேட்டாவுக்கான பில் தான் அவரை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. வெளிநாட்டில் மொபைல் டேட்டாவை பயன்படுத்தியதால் அவரின் பில் 1,43,443.74 அமெரிக்க டாலர் என வந்துள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 1 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 990 ரூபாயாகும். வெளிநாட்டில் மொபைல் டேட்டாவை பயன்படுத்தியதால் ரெமண்டின் மொபைல் பில் அவரை கிடுகிடுக்க வைத்துள்ளது. 

ரெமண்ட் தனது வெளிநாட்டு பயணம் குறித்து அவரின் மொபைல் நெட்வார்கிடம் தகவல் தெரிவித்துள்ளனர். உங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை, நீங்கள் எந்த சேவையை வேண்டுமானாலும் பெறலாம் என அந்நிறுவனம் தன்னிடம் தெரிவித்ததாக ரெமண்ட் கூறினார். ஜியோ, ஏர்டெல் போன்று அமெரிக்காவின் T-Mobile நிறுவனத்தின் 30 ஆண்டுகால வாடிக்கையாளர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.  

சுவிட்சர்லாந்தில் இருந்து அவர்கள் வீடு திரும்பியதுமே இந்த மொபைல் பில் அவர்களின் கண்களின் கண்ணீரை வரவழைத்துள்ளது. இந்த ஜோடி தனது மூன்று வார சுற்றுலாவில் மொத்தம் 9.5 gigabytes மொபைல் டேட்டாவை பயன்படுத்தி உள்ளனர். அதாவது, அவர்கள் ஒருநாளைக்கு சுமார் 6 ஆயிரம் டாலருக்கு மொபைல் டேட்டாவை பயன்படுத்தி உள்ளனர். அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு நாளைக்கு 5 லட்சத்து 222 ரூபாய்க்கு டேட்டாவை பயன்படுத்தியிருக்கின்றனர்.

பில்லை பார்த்ததும் ரெமண்ட் T-Mobile நிறுவனத்தை தொடர்புகொண்டுள்ளனர். இருப்பினும், அந்நிறுவனத்தின் பிரதிநிதி இந்த புகாரை கேட்க ரெமண்ட் பல நிமிடங்கள் மொபைல் காலில் காத்திருந்துள்ளார். நீண்ட கழித்து, ஒரு பெண் பிரதிநிதி பதிலளித்தார். அவர்,”இல்லை, இது சரியான பில்தான்” என்றார். உடனே ரெமண்ட்,”சரியான பில் என்றால் என்ன அர்த்தம்?” என கேட்க, அதற்கு அந்த பெண்,”இதுதான் நீங்கள் கொடுக்க வேண்டிய தொகை” என கூறியுள்ளார். அது ரெமண்டை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. 

ரெமண்ட் – லிண்டா தம்பதியினர் T-Mobile நிறுவனத்தை கடுமையாக எதிர்த்து புகார் அளித்தனர். ஆனால் ஆரம்பத்தில் நிறுவனத்திடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. இந்த மொபைல் பில்லை எதிர்த்து அவர்கள் சட்ட உதவியையும் நாடினர். ஊடகங்களின் வெளியான செய்திகளை அடுத்து T-Mobile அவர்களுக்கு பதிலளித்தது. முழுத் தொகையையும் முழுமையாக வரவு வைக்க அந்நிறுவனம் ஒப்புக்கொண்டது.

இந்த சம்பவம் முக்கிய பிரச்னை மீது வெளிச்சம் பாய்ச்சியுள்ளது. அதாவது, இன்டர்நேஷ்னல் ரோமிங்கின் போது மொபைலை ஏரோபிளைன் மோடில் போட வேண்டும் என்பதை வாடிக்கையாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். வெளிநாட்டிற்குச் செல்லும் போது பெரும்பாலும் ஃவை-பையில் டேட்டா இணைப்பு வைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, இன்டர்நேஷ்னல் ரோமிங் சார்ந்த திட்டங்களை போடாமல் நீங்கள் சென்றாலும் ரெமண்டிற்க ஆன நிலைமை உங்களுக்கும் ஏற்படலாம். 

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்