12 வருடத்தில் அசுர வளர்ச்சி கண்ட சந்தோஷ் நாராயணனின் 

இந்தியா, மே 15-

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இன்று தன்னுடைய 40-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான குரு படத்தில் ஏ.ஆர்.ரகுமானுக்கு அசிஸ்டெண்டாக தன்னுடைய பணியை துவங்கிய சந்தோஷ் நாராயணன்…  இயக்குனர் பா.ரஞ்சித் இயக்குனராக அறிமுகமான ‘அட்டகத்தி’ படத்தில் இசையமைப்பாளராக தன்னுடைய கேரியரை துவங்கினார். இதை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பிட்சா, இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கிய சூது கவ்வும் போன்ற படங்களில் அடுத்தடுத்து இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார்.

சூது கவ்வும் படத்தில், சந்தோஷ் நாராயணின் இசை மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. பின்னர் இவர் இசையமைத்த, மெட்ராஸ், 36 வயதினிலே, இறுதி சுற்று, மனிதன், கபாலி, காலா, வட சென்னை, கர்ணன் போன்ற பல படங்களில் இசை அதிகம் பேசப்பட்டது. தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இதில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் பான் இந்தியா படமாக உருவாகும் கல்கி 2898 AD திரைப்படமும் அடங்கும்.

தன்னுடைய முதல் முதல் படத்திற்கு இசையமைத்தபோது… சில ஆயிரமே சம்பளமாக பெற்ற சந்தோஷ் நாராயணன் 5 வருடத்தில் 25 லட்சத்திற்கு மேல் சம்பளம் பெரும் இசையமைப்பாளராக உயர்ந்தார். தற்போது இவர் ஒரு படத்திற்கு இசையமைக்கு ரூ.1 கோடியில் இருந்து 2 கோடி வரை பெறுவதாக கூறப்படுகிறது.

இசையமைப்பதை தாண்டி, சில மியூசிக் கான்செர்ட் நடத்தி வருவதை வழக்கமாக வைத்துள்ள சந்தோஷ் நாராயணனன், யூடியூமில் ஹிட் அடித்த எஞ்சாமி போன்ற, ஆல்பம் பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார். இவருடைய மகள் தீயும் ஒரு பின்னணி பாடகியாவார். இவர் பாடிய ரவுடி பேபி, ஏ சண்டகாரா போன்ற பல பாடல்கள் ரசிகர்களின் ஃபேவரட் பாடல்களில் ஒன்று.

இசையமைப்பாளாராக அறிமுகமான 12 வருடத்திலேயே… தன்னுடைய தனித்துவமான இசையால் ரசிகர்கள் மனதை கவர்ந்த, சந்தோஷ் நாராயணன் சென்னையில் பிரமாண்ட வீடு, சொகுசு கார், பைக், மியூசிக் ஸ்டுடியோ போன்றவற்றை வைத்துள்ளார். மேலும் இவரின் சொத்து மதிப்பு ரூ 21 கோடி முதல் 25 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. 

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்