14  என்.ஜி.ஓ. அமைப்புகளுக்கு வீரப்பன் வெ.43,000 மானியம்

ரெப்பா, ஜன.3 –

ரெப்பா சட்டமன்ற உறுப்பினரும் நெகிரி செம்பிலான் மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் வீரப்பன் சுப்ரமணியம் 14 அரசு சார்பற்ற அமைப்புகளுக்கு 43,000 வெள்ளி மானியம் வழங்கினார்.

பல்வேறு தன்னார்வ நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தளங்கள் ஆகியவற்றிக்கு இந்த மானியத் தொகை வழங்கப்பட்டதாக வீரப்பன் தெரிவித்தார்.

குறைந்த பட்சம் 500 வெள்ளி முதல் 5,000 வெள்ளி வரை பல்வேறு என்.ஜி.ஓ – க்களை சார்ந்தவர்களுக்கு இந்த மானியம் வழங்கப்பட்டது.

இந்த மானியத்தை பெற்று கொள்ளும் உறுப்பினர்கள் அவர்களின் அமைப்பின் நடவடிக்கைகளை சீர்ப்படுத்துவதற்கும் மாற்றியமைப்பதற்கும் பெரும் பங்காற்றும் என்று வீரப்பன் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்