170 சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டனர்

ஜோர்ஜ் டவுன், மார்ச் 1 –

பினாங்கு மாநிலத்தில் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி தொடங்கி, 10 நாட்களுக்கு நடைபெற்ற ஓபி லீமௌ சோதனை நடவடிக்கையில் சூதாட்டம் மற்றும் ஒழுங்கீன நடவடிக்கைகள் தொடர்பில் மொத்தம் 170 பேர் கைது செய்யப்பட்டனர் என்று பினாங்கு மாநில போலீஸ் துணைத் தலைவர் டத்துக் மொகமட் யூசுப் ஜான் மொகமட் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் 97 பேர் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் ஆவர். எஞ்சியவர்கள் அந்நிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று டத்துக் மொகமட் யூசுப் குறிப்பிட்டார்.

இக்காலக்கட்டத்தில் மொத்தம் 14 சோதனை நடவடிக்கைகள் மேற்கெள்ளப்பட்டன. இவற்றில் 10 நடவடிக்கைகள் கட்டடங்களிலும், நான்கு நடவடிகைகள் வெளிவளாகங்களிலும் மேற்கொள்ளப்பட்டதாக அவர் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்