2040 கோலாலம்பூர் உள்ளூர் திட்ட வரைவு நகல் வெளியிடப்பட்டது

கோலாலம்பூர், ஜன 30 –

2040 கோலாலம்பூர் உள்ளூர் திட்ட வரைவு நகல், கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் ஸலேஹா முஸ்தாபாவினால் கோலாலம்பூர் மாநகர் மன்ற பயிற்சி கழகத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2023 அக்டோபர் 19 ஆம் தேதி அரசு இதழில் கையகப்படுத்தப்பட்ட 2040 கோலாலம்பூர் கட்டமைப்பு திட்டத்தில் வரையப்பட்ட தொலைநோக்குப் பார்வை மற்றும் இலக்குகளை நிறைவு செய்யும் வகையில் கோலாலம்பூர் மேம்பாடுகள் மீதான திட்டங்கள் இந்த 2040 கோலாலம்பூர் உள்ளூர் திட்ட வரைவு நகல் உள்ளடக்கியிருக்கிறது.

குறிப்பாக, இந்த வரைவு நகல், கோலாலம்பூரில் ஒவ்வொரு லாட் நிலம் மீதான குறிப்பிடத்தக்க மேம்பாட்டுக்காக முன்மொழியப்பட்ட நில பயன்பாட்டு மண்டலங்களின் திட்டமிடலுக்கு அதீத முக்கியத்துவம் அளிக்கிறது.

இதன் தொடர்பில் 2040 கோலாலம்பூர் உள்ளூர் திட்ட வரைவு நகல், வரும் 2024 ஜனவரி 31 ஆம் தேதியிலிருந்து 2024 மார்ச் முதல் தேதி வரையில் Menara DBKL 1 மற்றும் 3 ஆகியவற்றிலும் கோலாலம்பூரில் 11 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் காட்சிக்கு வைக்கப்படும். மாநகர் வாசிகள் வருகை தந்து அதனை பார்வையிடுவதுடன் தங்கள் கருத்துகளை முன்வைக்கலாம். அல்லது கீழ் கண்ட அகப்பக்கத்தில் வலம் வரலாம். https://ppkl.dbkl.gov.my/e-pandangan.

தவிர, கோலாலம்பூர் மாநகர் மன்றமும் விரைவில் அறிவிக்கப்படவிருக்கும் ஒரு தேதியில் Menara DBKL 1, 30 ஆவது மாடியில் விளக்கமளிப்புக்கூட்டம் ஒன்றை நடத்தவிருக்கிறது. என்று கோலாலம்பூர் மாநகர் மன்றம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்