220 இடங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறன

நாடு முழுவதும், விரோதக்குடியேறிகளின் கவன ஈர்ப்புக்குரிய அரண்களாக விளங்கி வரும் 220 இடங்களை தீவிரமாக கண்காணிப்பதையும், அடிக்கடி சோதனை செய்வதையும் குடிநுழைவுத்துறை நிறுத்திக்கொண்டது கிடையாது என்று அதன் தலைமை இயக்குநர் டத்தோ ரஸ்லின் ஜூசோ தெரிவித்துள்ளார்.

அந்த 220 இடங்களில் கோலாலம்பூர் மாநாகரில் உள்ள ஜாலான் சிலாங், கொம்ப்லெக்ஸ் கோத்தா ராயா, புக்கிட் பிந்தாங், மஸ்ஜிட் இந்தியா, சீனா டவுன் ஆகியவை அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

சட்டவிரோதக் குடியேறிகள் அடிக்கடி கூடுகின்ற அந்த இடங்கள் குடிநுழைவுத்துறையின் ராடார் கண்காணிப்பின் கீழ் உள்ளன என்று இன்று பெர்னாமா டி.வி.க்கு அளித்த சிறப்புப் பேட்டியில் டத்தோ ரஸ்லின் ஜூசோ இதனை தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்