30 விழுக்காடு பூமிபுத்ரா பொருட்கள் விற்க வேண்டும்

புத்ராஜெயா, மார்ச் 2 –

நாட்டில் உள்ள அனைத்து பேரங்காடி மையங்களிலும் 30 விழுக்காடு பூமிப்புத்தராக்களின் உற்பத்தி பொருட்களை கட்டாயமாக விற்பனை செய்ய வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட வேண்டும் என்று நாட்டின் முன்னணி சங்கிலித் தொடர்பு வர்த்தகத் தளமான மைடின் மொகமட் ஹோல்டிங் பெர்ஹாட் நிர்வாக இயக்குநர் டத்துக் டாக்டர் அமிர் அலி மைடின் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒரு பேரங்காடி மையம் செயல்படுகிறது என்றால் அதில் குறைந்த பட்சம் 30 விழுக்காடு பூமிபுத்ரா உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை கட்டாயமாக்கப்படுவது மூலம் நாட்டில் உள்ள சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகள், தங்கள் பொருட்களை பேரங்காடி மையங்களில் மிகச் சுலபமாக விற்பனை செய்ய முடியும் என்று அமிர் அலி மைடின் குறிப்பிட்டார்.

இன்று புத்ராஜெயா, அனைத்துலக மாநாட்டு மையத்தில் முடிவடைந்த பூமிபுத்ரா பொருளாதார காங்கிரஸ் மாநாட்டில் உரையாற்றுகையல் அவர் இதனை தெரிவித்தார்.

அதேவேளையில் மனிதாபிமான அடிப்படையில் அரசாங்க சார்பு நிறுவனங்களான ஜி.ல்.சி வழங்கக்கூடிய உதவிப் பொருட்களில் 70 விழுக்காடு, உள்நாட்டைச் சேர்ந்த பூமிபுத்ராக்கள் தயாரிக்கின்றன பொருட்களாக அவை இருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.

மலேசியாவில் பூமிபுத்ராக்கள் தயாரிக்கின்ற பொருட்கள், பன்னாட்டு நிறுவனங்கள் தயாரிக்கப்படுகின்ற பொருட்களை விட மிகம் தரம் வாய்ந்ததாக உள்ளன என்று அமிர் அலி மைடின் தெரிவித்தன.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்