48 விபச்சாரப் பெண்கள் கைது செய்யப்பட்டனர்

செர்டாங், பிப்ரவரி 24 –

கோம்பாக், செர்டாங், செந்தூல் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட 13 ஓபி னோடா திடீர் சோதனையில் கைது செய்யப்பட்ட 64 நபர்களில் 48 பேர் வெளிநாட்டு விபச்சாரப் பெண்கள் என்று நம்பப்படுகின்றது.

நேற்று பிற்பகல் 3 மணியளவில் தொடங்கிய இச்சோதனை கிள்ளான் பள்ளத்தாக்கை சுற்றியுள்ள விபச்சார நடவடிக்ககைகளை புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத்துறையின் பிரிவு டி7 கண்காணிப்பின் மூலம் தெரியவந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சோதனையில் சம்பந்தப்பட்ட வளாகத்தின் மேலாளர்களாகக் கருதப்படும் 14 உள்ளூர் ஆண்களும் இரண்டு வெளிநாட்டுப் பெண்களும் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத்துறையின் இயக்குநர் டத்தோ ஶ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் ஜைன் தெரிவித்தார்.

குறிப்பிடப்பட்ட மசாஜ் வளாகங்கள் சட்டவிரோதமாக அந்நிய பெண்களை வேலைக்கு வைப்பது மட்டுமின்றி விபச்சார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஊக்குவிப்பதாக சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் அப்பெண்களுடன் உடலுறவில் ஈடுப்பட்டிருந்த வெளிநாட்டு ஆண்கள் மற்றும் தனிப்பட்ட பயண ஆவணமின்றி இருப்பவர்களும் கைது செய்யப்பட்டதாக முகமட் ஷுஹைலி கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்