5000 தொழில்முனைவர்களுக்கு தொழில்துறை வாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கின்றன – டத்தோ ரமணன் அறிவிப்பு

பெர்னாஸ் எனப்படும் Perbadanan Nasional Berhad -டில் இருக்கக்கூடிய தொழில் வாய்ப்புகளை இந்திய சமூகம் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று தொழில்முனைவர், கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஆர்.ரமணன் கேட்டுக் கொண்டார்.

கோலாலம்பூர், Bangsar South City – யில் வீற்றிருக்கும் பெர்னாஸ் தலைமை அலுவலகத்திற்கு இன்று மரியாதை நிமித்தமாக வருகை புரிந்த டத்தோ ரமணனுக்கு அந்த கழகத்தில் இருக்கக்கூடிய தொழில்துறை வாய்ப்புகள் மற்றும் அந்த வாய்ப்புகளை தொழில்முனைவர்கள் பயன்படுத்திக்கொள்ளக்கூடிய விதம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

முன்னதாக, துணையமைச்சர் ஆர். ரமணனை வரவேற்ற பெர்னாஸின் தலைவர் டத்தோ Hasimah Zainudin பெர்னாஸின் செயல்பாடுகள் குறித்தும் மற்றும் அதில் தொழில்முனைவர்கள் பயன்பெறக்கூடிய வாய்ப்புகளை குறித்தும் விளக்கம் தந்தார்.

பெர்னாஸின் திட்டங்கள் யாவும் சிறு வணிகத்தை பெரியளவில் முன்னெடுத்து செல்வதே அடிப்படை நோக்கமாகும் என்று டத்தோ ரமணன் கூறினார். சிறியளவில் தொடங்கப்படும் வியாபாரம் நாடு தழுவிய அளவில் விரிவுப்படுத்துவதே பெர்னாஸின் பிரதான திட்டமாகும் என்றார் அவர்.

பெர்னாஸில் Francais தொழிலியல் உரிமத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 44 கோடியே 10 லட்ச வெள்ளி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக டத்தோ ரமணன் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு 5,000 தொழில்முனைவர்களுக்கு தொழில்துறை வாய்ப்புகள் காத்துக் கொண்டிருப்பதாகவும் இந்திய சமூகம் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பலன் பெறுமாறும் அவர் வலியுறுத்தினார்.

மலேசியாவில் இருக்கக்கூடிய அனைவரும் பெர்னாஸ் வழங்கக்கூடிய இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறும் தொழில்துறை வாய்ப்புகள் குறித்து எந்தவொரு உதவிகளை வழங்குவதற்கும் பெர்னாஸ் தயாராக இருப்பதாகவும் டத்தோ ரமணன் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்