மலாக்கா, ஜன.8-
தனது அண்டை வீட்டைச் சேர்ந்த 6 வயது சிறுமியை மானபங்கம் செய்ததாக 67 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த சிறுமியின் தந்தை அளித்த புகாரைத் தொடர்ந்து அந்த முதியவர் கைது செய்யப்பட்டதாக மலாக்கா மாநில இடைக்கால போலீஸ் தலைவர் டத்தோ முகமட் நஸ்ரி ஜவாவி தெரிவித்தார்.
மூன்று உடன்பிறப்புகளில் இரண்டாவது பிள்ளையான அந்த சிறுமி, நடந்த சம்பவம் குறித்து அவரின் 31 வயது தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அலோர் காஜா, மஸ்ஜிட் தானா, கம்போங் ரந்தாவ் பாஞ்சாங்கில் அந்த முதியவர் கைது செய்யப்பட்டதாக முகமட் நஸ்ரி குறிப்பிட்டார்.
வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அந்த சிறுமியை மானபங்கம் செய்ததை விசாரணையின் போது அந்த முதியவர் ஒப்புக்கொண்டதாக அவர் மேலும் கூறினார்.