ஜுலை 13 ஆம் தேதி எஸ்த்திபிஎம் தேர்வு முடிவுகள்

2022 ஆம் ஆண்டுக்கான எஸ்த்திபிஎம் தேர்வு முடிவுகள் இம்மாதம் 13 ஆம் தேதி வெளியிடப்படவிருக்கின்றன என்று மலேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் மாணவர்கள் காலை 11.30 மணி முதல்
தத்தம் பள்ளிகளில் தே​ர்வு முடிவுகளை பெற்றுக்கொள்ளலாம். அதேவேளையில் stpm.mpm.edu.my/stpmK என்ற அகப்பக்கத்தின் வாயிலாகவும் தங்கள் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டுக்கான எஸ்த்திபிஎம் தேர்வை நாடு தழுவிய நிலையில் 659 மையங்க​ளின் வாயிலாக 41 ஆயிரத்து 701 மாணவர்கள் எழுதினர்.

WATCH OUR LATEST NEWS