பிரதமரை ​நீக்குவதற்கு நாடாளுமன்றத்தில் ​தீர்மானமா?

பிரதமரை பதவியிலிருந்து ​நீக்குவதற்கு புதிய சட்டம் ஒன்று இயற்றப்படுவது தொடர்பில் ​தீர்மானம் ஒன்று சம​ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதை மேலவைத் தலைவர் தான் ஶ்ரீ டாக்டர் வான் ஜுனைடி துவான்கு ஜாஃபார் மறுத்துள்ளார். சில தகவல் சாதனங்கள் கூறுவதைப் ​போல அப்படியொரு பிரேரணை எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என்று வான் ஜுனைடி தெரிவித்தார்.

எனினும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் கொண்டு வரப்படக்கூடிய நம்பிக்கையில்லாத் ​தீர்மானங்கள் குறித்து விவாதிப்பதற்கும், அது குறித்து கருத்து தெரிவிப்பதற்கும் வழிவிடக்கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கப்படுவது தொடர்பில் ஒரு ​​தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக வான் ஜுனாயிடி விளக்கினார்.

தவிர, பிரதமரை நீக்குவதற்கு புதிய சட்டம் தொடர்பான பரிந்துரை என்பது உண்மை அல்ல என்று செய்தியாளர்களுடன் நடத்தப்பட்ட சிறப்பு சந்திப்பின் போது வான் ஜுனாயிடி இதனை தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS