பூர்வாங்க ஆட்சேபத்தை சமர்ப்பித்தார் ஷீலா

கடமையில் இருந்த போலீஸ்காரரை மிரட்டியது உட்பட 3 வெவ்வேறு குற்றவியல் தன்மையிலான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள இன்ஸ்பெக்டர் ஷீலா, தமக்கு எதிரான 3 குற்றச்சாட்டுகளையும் ரத்துச் செய்யக் கோரி பூர்வாங்க ஆட்சேபத்தைத் தெரிவித்துள்ளார்.

செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தமது வழக்கறிஞர் மனோகரன் மலையாளம் மூலம் பூர்வாங்க ஆட்சேபத்தை தெரிவித்த புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த 35 வயது ஷீலா என்ற ஷீலா ஷரோன் ஸ்டீவன் குமார், தமக்கு எதிரான 3 குற்றச்சாட்டுகளும் அடிப்படையற்றவை என்பதுடன் மிக அற்பமானவை என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக பூர்வாங்க ஆட்சேப மனு ஒன்றை தாக்கல் செய்ய போவதாக ஷிலா தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS