பிரதமர் அலுவலகம், தற்காப்பு அமைச்சு மற்றும் சில அரசாங்க அலுவலகங்களில் உளவுப் பார்த்ததாக நம்பப்படும் மலேசியப்பிரஜை ஒருவர் நார்வே நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
25 வயதான அந்த மலேசியர் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை கைது செய்து செய்யப்பட்டு, தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக அந்த நாட்டின் ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.
அந்த மலேசியரை நான்கு வாரங்களுக்கு தடுத்து வைப்பதற்கான நீதமன்ற அனுமதியையும் அந்நாட்டு போலீசார் பெற்றுள்ளனர். மலேசியர் ஒருவர் நார்வே நாட்டில் பிடிபட்டு இருப்பதை விஸ்மா புத்ரா உறுதிப்படுத்தியுள்ளது.