கலக்கும் திரிஷ்யம் கூட்டணி – ரூ.30 கோடியை கடக்கும் “நெரு”

கடந்த டிசம்பர் 21 அன்று மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால் கதாநாயகனாக நடித்த “நெரு” திரைப்படம் உலகெங்கும் வெளியானது.

2013ல் மோகன்லால் கதாநாயகனாக நடித்து வெளியாகி, வசூலில் சக்கை போடு போட்ட “திரிஷ்யம்” திரைப்படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப், நெரு திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

திரிஷ்யம் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அனைத்திலும் பெரும் வெற்றி பெற்றதும், 2021ல் இதே கூட்டணியில்

“திரிஷ்யம் 2” வெளியாகி வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS