இந்த ஆண்டின் சிறந்த வசூல் செய்த திரைப்படத்திற்கான பட்டியலில் இடம் பிடித்த டங்கி

ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘டங்கி’. இந்த படத்தில் ஷாருக்கான் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும், பொமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட திறமையான நடிகர்கள் அவர்களுக்கென பிரத்யேக கதாபாத்திரங்களுடன் நடித்துள்ளனர்.

ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அபிஜித்

ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் சுனில் தில்லான் ஆகியோர் கதை எழுதி இருக்கிறார்கள்.

‘டங்கி’ திரைப்படம் டிசம்பர் 21-ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி குறிப்பிடத்தக்க வகையில் அதன் முத்திரையைப் பதித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS