ஈப்போ,பிப்.7
தாப்பா, ஜாலான் பீடோர் லாமாவில் மூதாட்டி ஒருவர் ஓட்டிச் சென்ற கார் தீப்பிடித்து எரிந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவத்தின் போது காரில் பயணித்த மேலும் ஒரு சிறுமி உட்பட இரண்டு சிறுவன்கள் தீக்காயம் ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
இன்று அதிகாலை 4.49 மணியளவில் கிடைக்கபெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்ததாக பேரா தீயணைப்பு, மீட்ப்புபடைத்துறையின் மூத்த அதிகாரி முஹமாட் சுஃபியான் யாக்குப் கூறினார்.
98 சதவீதம் கார் தீயினால் பாதிக்கப்பட்ட வேளையில் காலை 6:30 மணியளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டதாக முஹமாட் சுஃபியான் தெரிவித்தார்.
தீ விபத்தில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளையில், 8 மற்றும் 5 வயதுடைய அச்சிறுவர்கள் மருத்துவமனைக்கு ஆம்புலஸில் கொண்டு செல்லப்பட்டதாக முஹமாட் சுஃபியான் விவரித்தார்.