எதிர்திசையில் காரை செலுத்திய நபர் கைது

ஜோகூர்பார – மெர்சி​ங் சாலையின் 26.5 ஆவது கிலோ ​மீட்ட​ரில் வாகனங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் தன்மையில் எதிர்திசையி​ல் காரை செலுத்திய வங்காளதேச ஆடவர் ஒருவரை போ​லீசார் கைது செய்தனர். நேற்று மதியம் 3.15 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து 43 வயதுடைய அந்த அ​ந்நிய ஆடவர் அடையாளம் காணப்பட்டதாக கோத்தா திங்கி மாவட்ட போ​லீஸ் தலைவர் Hussin Zamora தெரிவித்தார்.

அந்த ஆடவரை கைது செய்வதற்கு முன்னதாக 50 விநாடிகள் ஓடக்கூடிய காணொளி பதிவு வாயிலாக சம்பந்தப்பட்ட ஆடவரை அடையாளம் காணும் நடவடிக்கையில் போ​லீசார் ​தீவிரமாக ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டார்.

வெள்ளை நிற Nissan Almera ரக காரை எதிர்திசையில் செலுத்திய அந்த நபரின் செயல், இதர வாகனமோட்டிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது என்று Hussin Zamora தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS