இந்தியா, மே 02-
ஐபிஎல் 2024 தொடரில் 7 போட்டிகளுக்கு பிறகு முதல் முறையாக தோனி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 49ஆவது லீக் போட்டியில் ஆட்டமிழந்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 49ஆவது லீக் போட்டி தற்போது எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரண் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி சிஎஸ்கே அணியில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அஜிங்க்யா ரஹானே இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
இதில், இருவரும் நிதானமாக தொடங்கினர். 4 ஓவர்களில் சிஎஸ்கே 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 5ஆவது ஓவரில் 3 பவுண்டரி உள்பட 14 ரன்கள் எடுக்கப்பட்டது. 6ஆவது ஓவரில் ரஹானே 3 பவுண்டரி எடுக்க பவர்பிளேயில் சிஎஸ்கே விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் எடுத்தது.

அதன் பிறகு ஹர்ப்ரீத் பிரார் மற்றும் ராகுல் சாஹர் இருவரும் மாறி மாறி பந்து வீசி விக்கெட் எடுத்தனர். மேலும், பிரார் ஒரே ஓவரில் ரஹானே மற்றும் ஷிவம் துபே விக்கெட்டை கைப்பற்றினார். ரஹானே 29 ரன்களில் ஆட்டமிழக்க துபே ரன் ஏதும் எடுக்காமல் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார்.
ஆனால், இந்தப் போட்டியில் 11 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 14 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ரன் அவுட்டாகியுள்ளார். இந்தப் போட்டியில் ஒரு சிக்ஸர் அடித்ததன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 248 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது.
பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஹர்ப்ரீத் பிரார் மற்றும் ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அர்ஷ்தீப் சிங் மற்றும் கஜிசோ ரபாடா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.