எம்.எஸ்.தோனி காலில் தலை வைத்து வணங்கிய ரசிகர்

இந்தியா, மே 11-

தனது காலில் ரசிகர் ஒருவர் தலையை வைத்து வணங்கிய போது அவரை எழுப்பிவிட்ட தோனியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான 59ஆவது லீக் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணியானது 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் குவித்தது. இதில், சுப்மன் கில் 104 ரன்களும், சாய் சுதர்சன் 103 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் கடின இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரச்சின் ரவீந்திரா 1 ரன்னில் ரன் அவுட்டானார். இதே போன்று அஜிங்க்யா ரஹானேவும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். இதன் மூலமாக சிஎஸ்கே 2 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 3 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் டேரில் மிட்செல் மற்றும் மொயீன் அலி இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடவே சிஎஸ்கே விக்கெட் சரிவிலிருந்து மீண்டு வந்து ரன்கள் குவித்தது. இதில், மிட்செல் 27 பந்துகளில் அரைசதம் அடித்தார். இவரைத் தொடர்ந்து மொயீன் அலி 31 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

எனினும் மிட்செல் 34 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சர் உள்பட 63 ரன்களில் ஆட்டமிழக்க, மொயீன் அலி 36 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சர் உள்பட 56 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர்களைத் தொடர்ந்து வந்த ஷிவம் துபே ஹாட்ரிக் கோல்டன் டக்கிலிருந்து தப்பித்து முதல் பந்தில் பவுண்டரி விளாசினார்.

இவரைத் தொடர்ந்து விராட் கோலி 264 சிக்ஸர்களுடன் 2ஆவது இடத்திலும், தோனி 251 சிக்ஸர்களுடன் 3ஆவது இடத்திலும் இருக்கின்றனர். இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

WATCH OUR LATEST NEWS