இந்தியா, மே 14-
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக சிஎஸ்கே சேப்பாக்கத்தில் 50ஆவது வெற்றியை பெற்றுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான 61ஆவது போட்டி இன்று எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டிக்கு முன்னதாக சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் போட்டிக்கு பிறகு ரசிகர்கள் யாரும் சென்றுவிட வேண்டாம். மைதானத்திலேயே இருக்கும்படி சிஎஸ்கே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
இதையடுத்து இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் ரியான் பராக் அதிகபட்சமாக 47 ரன்கள் எடுத்தார். துருவ் ஜூரெல் 28 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 24 ரன்களும் எடுத்தனர்.
பின்னர், 142 ரன்களை துரத்திய சிஎஸ்கே அணியில், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி நிதானமாக விளையாடினர். இதில், ரச்சின் ரவீந்திரா 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
டேரில் மிட்செல் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். மொயீன் அலி 10 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த ஆறுச்சாமி 18 ரன்களில் நடையை கட்டினார். ரவீந்திர ஜடேஜா பீல்டரை வழி மறித்த நிலையில் மூன்றாவது நடுவர் மூலமாக அவுட் கொடுக்கப்பட்டு வெளியேறினார்.
இரண்டாவது ரன்னிற்கு ஓடும் போது அவரது டேரக்ஷனில் ஓடிய நிலையில், பின்னர், திரும்ப வந்த நிலையில் டேரக்ஷனை மாற்றி ஸ்டெம்பிம்பிற்கு நேராக ஓடி வந்துள்ளார். அப்போது சஞ்சு சாம்சன் ரன் அவுட்டிற்கு முயற்சித்த நிலையில் பந்து ஜடேஜா முதுகில் பட்டது. இதையடுத்து சாம்சன் அவுட் கேட்க, நடுவர் மூன்றாவது நடுவரை நாடினார். இறுதியில் அவர் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.
கடைசியில் சமீர் ரிஸ்வி களமிறங்க, கேப்டன் பொறுப்பை உணர்ந்து ஒவ்வொரு ரன்னாக எடுத்து விளையாடிய கெய்க்வாட் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 18.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில் தான் இந்தப் போட்டிக்கு பிறகு சிஎஸ்கே வீரர்களுக்கு நிர்வாகம் சார்பில் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதையடுத்து, ரசிகர்களுக்கு டென்னிஸ் பந்து மற்றும் ஜெர்சி பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் தோனியுடன், சின்ன தல சுரேஷ் ரெய்னாவும் கலந்து கொண்டார். அவரும், ரசிகர்களுக்கு டென்னிஸ் பந்து பரிசாக வழங்கினார்.
சிஎஸ்கே போன்று கொல்கத்தா ஹோம் மைதானத்தில் 52 போட்டியிலும், மும்பை இந்தியன்ஸ் 52 போட்டியிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 42 போட்டியிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் 37 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.