கோலாலம்பூர், மே 27-
கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் (DBKL )அதிகாரிகளிடமிருந்து பிடிப்படாமல் தப்பிப்பதற்கு, உரிமம் பெற்ற இதர கடைகளின் வரிசையில் பதுங்கியிருந்து வியாபாரம் செய்து வந்த அந்நிய நாட்டவர்களின் நடவடிக்கை அம்பலமானது.
கடந்த சனிக்கிழமை கோலாலம்பூர், ஜாலான் பெட்டாலிங் -கில் DBKL அதிகாரிகள் மேற்கொண்ட சிறப்பு சோதனையின் மூலம் இத்தகைய செயல் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இச்சோதனையில் தொலைப்பேசிகள், ஆபரணங்கள், காலணிகள், உடைகள் உட்பட மேலும் சில பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் ஆறு அந்நிய நாட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டன.
சம்பந்தப்பட்ட அந்நிய பிரஜைகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட மொத்தம் 1,440 வணிகப் பொருட்கள் அனைத்தும் முறையான ஆவணங்கள் மற்றும் பதிவுகளுக்காக செரஸ், ஜாலான் லோம்போங் DBKL -லுக்கு கொண்டு செல்லப்பட்டதாக DBKL ஓர் அறிக்கையில் கூறியிருந்தது.