டெஸ்ட் போட்டிக்கு மட்டும் கூட பயிற்சியாளராக இருங்க – எவ்வளவு சொல்லியும் கேட்காத ராகுல் டிராவிட்!

இந்தியா, ஜூன் 04-

டெஸ்ட் கிரிக்கெட்டுக்காவது ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கேட்டுக் கொண்டுள்ளார்.

டி20 உலகக் கோப்பை தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கு முன்னதாக வார்ம் அப் போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்தியா தனது 15ஆவது போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் இந்தியா 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி இன்று இரவு 8 மணிக்கு நியூயார்க்கில் நடைபெறுகிறது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் வரும் 29 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருந்த போது அண்டர் 19 உலகக் கோப்பையை வெல்ல காரணமாக இருந்தார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பதவி ஏற்றார். இதைத் தொடர்ந்து இந்திய அணி டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரை சென்றது. ஆசிய கோப்பையை வென்றது. இந்த நிலையில் வரும் 29 ஆம் தேதியுடன் தனது பதவிக்காலம் முடியும் நிலையில், பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ராகுல் டிராவிட் விலக இருக்கிறார்.

மீண்டும் பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பிக்க ராகுல் டிராவிட் மறுத்துவிட்டார். இந்த நிலையில் தான் இது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியிருப்பதாவது: பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருக்க வேண்டும். தனது முதல் போட்டியில் அவர் தான் கேப்டன். தனது ரோல் மாடலும் அவர் தான்.

நான் ராகுல் டிராவிட்டை சந்தித்து பயிற்சியாளராக இருங்கள் என்று கூறினேன். டெஸ்ட் கிரிக்கெட்டுக்காவது பயிற்சியாளராக இருக்க அறிவுறுத்தினேன் என்று கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த ராகுல் டிராவிட் கூறியிருப்பதாவது: இது தனக்கு பிடித்த வேலை. நான் எப்போதும் வீரர்களுடன் இணைந்து பணியாற்றுவதை விரும்புவேன். ஆனால், தனிப்பட்ட வாழ்க்கையையும் பார்க்க வேண்டி உள்ளது. ஆதலால், தான் மீண்டும் பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS