பெட்டாலிங் ஜெயா, ஜூன் 12-
மலேசியாவிற்கு வருகை புரிந்துள்ள சிங்கப்பூர் புதிய பிரதமர் லாரன்ஸ் வோங், இன்று புத்ராஜெயாவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் சந்திப்பு நடத்தினார்.
மலேசியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் முக்கியமாக விவாதித்தனர்.
கடந்த மே 15 ஆம் தேதி சிங்கப்பூரின் பிரதமராக பொறுப்பேற்றப் பின்னர் லாரன்ஸ் வோங், மலேசியாவிற்கு மேற்கொள்ளும் முதலாவது வருகை இதுவாகும்.
தமது துணைவியார் லு டீஸி லுய்-யுடன் சிங்கப்பூர் பிரதமர் மலேசியாவிற்கு மேற்கொண்டுள்ள இந்த வருகையானது, மலேசியா மற்றும் சிங்கப்பூரின் நீண்ட கால உறவை வலுப்படுத்துவதற்காக பகிரப்பட்டு வரும் உறுதிப்பாட்டை கோடிக்காட்டியுள்ளது.