அமெரிக்க, ஜுன் 28-
அமெரிக்காவில் டைம்ஸ் ஸ்கொயரில் மெத்தை தயாரிக்கும் நிறுவனமான டூரோஃப்ளெக்ஸ் விளம்பரத்திற்காக விராட் கோலிக்கு தங்கத்தால் ஆன சிலை ஒன்றை வைத்துள்ளது.
ரன் மெஷின் என்று அழைக்கப்படும் கோலி இப்படி சொற்ப ரன்களில் வெளியேறி வருவது ரசிகர்களிடையே விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது. இந்த நிலையில் தான் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்திலுள்ள டைம்ஸ் ஸ்கொயரில் விராட் கோலி தங்கத்தால் ஆன சிலை வைக்கப்பட்டுள்ளது.
கட்டில், மெத்தை தயாரிக்கும் நிறுவனமான டூரோஃப்ளெக்ஸ் என்ற நிறுவனம் விராட் கோலிக்கு என்று தங்கத்தால் ஆன சிலை ஒன்றை நிறுவியுள்ளது. அந்த நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராக இருக்க்ம் விராட் கோலிக்கு இப்படியொரு சிலை ஒன்றை வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
கம்யூட்டர் கிராபிக்ஸ் மூலமாக உருவாக்கப்பட்ட அந்த வீடியோவை டூரோஃப்ளெக்ஸ் நிறுவனம் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த வீடியோவில் விராட் கோலியின் உயிரை விட பெரிய சிலை நியூயார்க் மாகாணத்தின் டைம்ஸ் ஸ்கொயர் அரங்கில் வைக்கப்பட்டுள்ளது