யூரோ கிண்ண காலிறுதி தொடருக்கு நெதர்லாந்து – துருக்கி அணிகள் தகுதி

நெதர்லாந்து , ஜூலை 03-

யூரோ 2024 கால்பந்து தொடரின் நேற்று இடம்பெற்ற இரண்டு போட்டிகளில் நெதர்லாந்து மற்றும், துருக்கி அணிகள் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

தற்போது இடம்பெற்று வரும் 2ஆவது சுற்றில் 16 அணிகள் பங்குபற்றி காலிறுதிக்கான ஆட்டங்களில் விளையாடி வருகின்றன.

அந்த வகையில் நேற்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் நெதர்லாந்து மற்றும் ரோமானியா அணிகள் மோதின.

ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நெதர்லாந்து அணி முதல் பாதியில் கோடி கேக்போ அடித்த பெனல்டிக் கோல் மூலம் 1 -0 என முன்னிலை பெற்றது.

அதனை தொடர்ந்து 2 ஆவது பாதியில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய நெதர்லாந்து அணியின் மலென் அடுத்தடுத்து 2 கோல்களை அணிக்காக பெற்றுக்கொடுக்க நெதர்லாந்து அணி 3 – 0 என்ற கணக்கில் ரோமானியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

அதனை தொடர்ந்து இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில், துருக்கி மற்றும் ஆஸ்திரியா அணிகள் மோதின. குறித்த போட்டியில் துருக்கி அணி 2 – 1என்ற கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.இறுதி நிமிடம் வரை போட்டியானது 2 -1 என தொடர துருக்கி அணி வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

இதன்படி நடைபெறவுள்ள காலிறுதி சுற்றுக்கு துருக்கி, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், போர்த்துகல், நெதர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன

WATCH OUR LATEST NEWS