இந்தியா, ஜூலை 11-
முன்னணி இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நடிகை அதிதி ஷங்கர், கைதி, மாஸ்டர், போன்ற படங்களில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக நடிகை அதிதி சங்கர் நடிக்க உள்ள படத்தின் பூஜை போடப்பட்டுள்ளது.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி, தன்னுடைய முதல் படத்திலேயே ஸ்டார் அந்தஸ்தை பெற்ற நடிகர் கார்த்திக்கு ஜோடியாக ‘விருமன்’ படத்தில் நடித்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இதை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்தார். தற்போது முரளியின் மகன் ஆகாஷ் ஹீரோவாக அறிமுகமாகும் நேசிப்பாயா படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது. முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.