ஜூலை 12-
மன்னர் சார்லசுக்கும் இளவரசி கேட்டுக்குமிடையே எத்தகைய பாசம் உள்ளது என்பது பெரும்பாலானோர் அறிந்த ஒரு விடயம்தான். ஆனால், ஒருமுறை மன்னருடைய கோரிக்கை ஒன்றையே நிராகரித்தாராம் கேட்!
மன்னரின் கோரிக்கையை நிராகரித்த இளவரசி கேட்

இளவரசி கேட்டின் முழுப்பெயர் கேத்தரின் என்பதை பலரும் அறிந்திருக்கலாம். ஒரு முறை, மன்னரும் ராணியும் இளவரசி கேட்டுக்கு ஒரு கோரிக்கை வைத்தார்களாம். அதாவது மன்னர் பெயர் சார்லஸ் (Charles), ராணி பெயர் கமீலா (Camilla). இளவரசி கேட்டின் பெயர் கேத்தரின் (Catherine). ஆக, ஏற்கனவே ராஜ குடும்பத்தில் இரண்டு பேருடைய பெயர்கள் C என்னும் எழுத்தில் துவங்குவதால், கேட் தனது பெயரை Katherine என மாற்றிக்கொள்ளலாம் என பரிந்துரைத்தார்களாம் மன்னரும் ராணியும்.
ஆனால், கேட் தன் பெயரை மாற்றிக்கொள்ள மறுத்துவிட்டாராம். ஆனாலும், இன்னமும் மன்னர் மற்றும் ராணியுடன் நல்ல நட்பு பாராட்டிவருகிறார் கேட் என்பதை மறுக்கமுடியாது. இந்த விடயத்தை இளவரசர் ஹரி தனது ஸ்பேர் என்னும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்
கேட் தன் பெயரை மாற்றிக்கொள்ளுமாறு மன்னரும் ராணியும் ஆலோசனை கூறியதைப் பார்த்துக்கொண்டிருந்த ஹரி, தன் அண்ணன் வில்லியம் பக்கமாக திரும்பி, என்ன இது? என்பதுபோல் ஒரு பார்வை பார்க்க, அவர் முகத்திலோ எந்த உணர்ச்சியும் இல்லையாம்!
