பாரீஸ், ஜூலை 16-
பாரீஸ் முதல் டோக்கியோ ஒலிம்பிக் வரையில் வெற்றி வாகை சூடிய மேற்கு வங்க விளையாட்டு வீரர்களுக்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நிதியுதவி அளிக்க தவறிவிட்டதாக பாஜக தேசிய தகவல் மற்றும் தொழில்நுட்ப துறை பொறுப்பாளர் அமித் மால்வியா பகிரங்மாக குற்றம்சாட்டியுள்ளார்.
பாரீஸில் 3ஆவது முறையாக 2024 ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெற இருக்கிறது. வரும் 26 ஆம் தேதி தொடங்கும் ஒலிம்பிக் 2024 விளையாட்டு போட்டியில் இந்தியா சார்பில் 113 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், குத்துச்சண்டை, குதிரையேற்றம், ஹாக்கி, கோல்ஃப், ஜூடோ, ரோயிங், படகு போட்டி உள்பட 16 பிரிவுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.