
பினாங்கு , ஜுலை19-
பினாங்கு இஸ்லாமிய சமய விவகார இலாகாவுடன் இணைந்து, பினாங்கு உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் அமலாக்க அதிகாரிகள் கடந்த புதன்கிழமை அருண் மசாலா தொழிற்சாலையில் திடீர் சோதனை மேற்கொண்டதாக கூறப்படுவதை அந்த முன்னணி மசாலா நிறுவனம் மறுத்துள்ளது.
பினாங்கு ,புக்கிட் மெர்தாஜாம், பெர்மாடாங் டிங்கி-யில் இருக்கும் ஒரு நிறுவனத்துடன் தொடர்புப்படுத்தப்பட்ட இந்த குற்றச்சாட்டு, தங்கள் நிறுவனத்தின் அன்றாட செயலாக்கத்திற்கு எதிராக இடையூறு ஏற்படுத்தியிருப்பதாக அருண் மசாலா நிறுவனத்தின் பிரதிநிதி நோராசானி ஆஜர் தெரிவித்தார்.
மசாலா வகைகளை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படும் தங்கள் நிறுவனப் பொருட்கள் யாவும் கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து JAKIM- மினால் வெளியிடப்படும் HALAL சான்றிதழை கொண்டிருக்கின்றன என்று அருண் மசாலா நிறுனத்தின் HALAL பிரிவின் நிர்வாகியுமான நோராசானி ஆஜர் விளக்கம் அளித்துள்ளார்.
HALAL சான்றிதழை கொண்டிருக்கவில்லை என்று தங்களின் அருண் மசாலா நிறுவனத்தை அல்லது தொழிற்சாலையை தொடர்புப்படுத்தி கூறப்படும் குற்றச்சாட்டை வன்மையாக மறுக்கும் நோக்கத்திலேயே இன்றைய செய்தியாளர்கள் கூட்டத்தை தாங்கள் கூட்டியதாக நோராசானி ஆஜர் தெளிவுபடுத்தினார் .பெர்மாடாங் டிங்கி அனைவரின் தகவலுக்காக, i-யில் மசாலாப் பொருட்களை தயாரிக்கும் பல தொழிற்சாலைகள் உள்ளன. எனவே உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் அமலாக்க அதிகாரிகளால் திடீர் சோதனை செய்யப்பட்ட தொழிற்சாலை என எங்களை தொடர்புபடுத்துவது ஏற்புடையது அல்ல என்று நோராசானி ஆஜர் விளக்கினார்.
“உண்மையிலேயே இந் நாட்டில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு தரத்தை உறுதி செய்வதற்காக இந்த HALAL சான்றிதழ் விவகாரத்தில் அதீத முக்கியத்துவத்தை நாங்கள் வழங்கி வருகிறோம்” என்று அருண் மலாசா நிறுவனத்தின் நிர்வாக அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் நோராசானி ஆஜர் தெளிவுபடுத்தினார்.
அமலாக்க அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்ட ஒரு மசாலா தொழிற்சாலை தொடர்பில் உண்மை நிலவரத்தை அறிந்து கொள்வதற்கு வாடிக்கையாளர்களும், விநியோகிப்பாளர்களும் நேற்று முதல் தங்களை தொடர்பு கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்னும் சிலர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, இவ்விவகாரத்தை தொடர்புப்படுத்தி தங்களை மிரட்டும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் நோராசானி ஆஜர் விளக்கினார்.