பாரிசான் நெசனல் கூட்டணியில் உள்ள கட்சிகளைப் பாரிசான் புறக்கணிக்கவில்லை

கோலாலம்பூர்,ஜூலை 21-

பாரிசான் நெசனல் கூட்டணியில் உள்ள கட்சிகளைப் பாரிசான் புறக்கணிக்கவில்லை என பாரிசான் கூட்டணியின் தலைவர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi கூறினார். பாரிசான் எடுகின்ற எந்த முடிவும் கூட்டணியில் உள்ள இதர கட்சிகளுடன் கலந்தாலோசித்தபின்னரே முடிவு எடுக்கப்படுவதால் பாரிச்சான் யாரையும் புறக்கணிக்கவில்லை என சாயிட் தெளிவுப்படுத்தினார்.

அண்மையில் சபா மாநிலத்தில், பாரிசான் ஒன்றுகூடும் நிகழ்ச்சியில் மசீச கட்சியின் தலைவர் Datuk Seri Dr Wee Ka Siong திறந்து வைத்தார் என்பதே பாரிசான் யாரையும் புறக்கணிக்கவில்லை என்பதை வெளிகாட்டுகிறது என அவர் மேலும் கூறினார்.

கட்சியின் வெளியே நின்று கொண்டு கருத்துகள் பேசுகின்றவர்கள், கட்சியை வழி நடத்துவதில் சிரமங்கள் ஏற்படுத்தினாலும், அதிலிருந்து கடந்து வந்து பரிசான் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருப்பதுதான் உண்மை என சாயிட் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS