சண்டையை ஆரம்பித்த ஹர்திக்… அதுவும் கம்பீரின் சகா உடன்… என்ன மேட்டர்?

இலங்கை, ஜூலை 24-

IND vs SL T20: இலங்கையில் நேற்று நடந்த வலைப்பயிற்சியில் ஹர்திக் பாண்டியாவுக்கும், புதிய துணை பயிற்சியாளர் அபிஷேக் சர்மாவுக்கும் நடந்த காரசாரமான வாக்குவாதம் குறித்து இங்கு

ND vs SL T20, Hardik Pandya: இலங்கை அணிக்கு எதிராக தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஓடிஐ தொடர்களை விளையாட இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஜூலை 27ஆம் தேதி டி20 தொடர் தொடங்குகிறது. ஜூலை 28, 30 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த டி20 போட்டிகள் நடைபெறும் நிலையில், ஆக. 2, 4, 7ஆம் தேதி ஆகிய நாள்களில் மூன்று ஓடிஐ போட்டிகளும் நடைபெறுகின்றன. டி20 போட்டிகள் பல்லேகலே நகரிலும், ஓடிஐ போட்டிகள் கொழும்பு நகரிலும் நடைபெறுகின்றன. 

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் (Gautam Gambhir) பொறுப்பேற்ற உடன் நடைபெறும் முதல் தொடர் இதுதான். இதுகுறித்த எதிர்பார்ப்புகள் அதிகமாகியிருக்கும் சூழலில், நேற்று முன்தினம் இந்திய அணியினர் மும்பையில் இருந்து இலங்கைக்கு சென்றனர். குறிப்பாக, டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் நடைபெற்றாலும் பெரும்பாலும் இந்திய டி20 அணியை சேர்ந்தவர்களே தற்போது இலங்கைக்கு சென்றுள்ளனர். ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓடிஐ அணியில் இடம்பெற்றுள்ளதால் அவர்கள் சற்று தாமதமாக அணியுடன் இணைந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது. 

WATCH OUR LATEST NEWS