கேமி சூறாவளி: தாய்வான், பிலிப்பைன்ஸில் மூழ்கிய கப்பல்கள்- 9 பேரை தேடிவரும் மீட்பு படை

தாய்வான், ஜூலை 26-

தாய்வானின் தெற்கு கடலில் சரக்கு கப்பல் மூழ்கியதால் காணாமல் போன 9 பேரை, மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர்.

கேமி சூறாவளி தாய்வானை தாக்கியபோது, இந்த சரக்கு கப்பல் தெற்கு துறைமுக நகரமான காவ்ஷியுங்கில் இருந்துள்ளது.

தங்களது கடற்பகுதியில் மூழ்கிய ஃபு ஷுன் என்ற சரக்குக் கப்பலில் மியான்மர் நாட்டை சேர்ந்த 9 பேர் இருந்ததாக தாய்வானின் கடலோர காவல்படை கூறியுள்ளது.

அத்துடன் இந்த சூறாவளியில் மேலும் 3 வெளிநாட்டு கப்பல்கள் அடித்து செல்லப்பட்டதாகவும், ஆனால் அவை பாதுகாப்பாக இருப்பதாகவும் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

இந்த சூறாவளியால் பிலிப்பைன்ஸில் கடும் மழை பெய்து. இங்கு 1.5 மில்லியன் லிட்டர் எரிபொருளைக் கொண்டு சென்ற ஒரு கப்பல் கவிழ்ந்தது.

பிலிப்பைன்ஸ் கொடியுடன் கூடிய ‘எம்டி டெர்ரா நோவா’ என்ற இந்த கப்பலிலிருந்து 16 பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர், மேலும் ஒருவர் காணவில்லை என போக்குவரத்து செயலாளர் ஜெய்ம் பாவுடிஸ்டா தெரிவித்தார்.

புதன் கிழமை தாய்வானின் கிழக்குக் கடற்கரையில் கேமி சூறாவளி கரையைக் கடந்தது. இதில் மூன்று பேர் பலியாகினர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாய்வானைத் தாக்கும் முன்,கேமி பிலிப்பைன்ஸில் மழை பொழிவை அதிகப்படுத்தியது. கடும் மழை காரணமாக அங்கு எட்டு பேர் இறந்தனர்.

WATCH OUR LATEST NEWS