JOHOR-ரில் வேலை செய்யும் உள்நாட்டினரின் சம்பளத்தை உயர்த்தும் நடவடிக்கையில், அம்மாநில அரசாங்கம் களமிறங்கியுள்ளது

ஜொகூர், ஜூலை 29-

ஜொகூர்ரில் முதலீட்டு பகுதிகளில், வேலை செய்துவரும் உள்நாட்டு தொழிலாளர்களின் சம்பள விகிதத்தை அதிகரிப்பது தொடர்பில், அம்மாநில அரசாங்கம் முதலீட்டாளர்களிடம் பேச்சுகளை நடத்தி வருகின்றது.

பல துறைகள், அதிக மற்றும் நியாயமான சம்பள விகிதத்தை கொண்டிருக்க வேண்டியதை, தனது தரப்பு உணர்ந்துள்ளதாக,ஜொகூர் மென்டேரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காசி தெரிவித்தார்.

சம்பள விகிதத்தை அதிகரிப்பதன் வழி, அதிகமான இளைஞர்கள் ஜொகூர்ரிலேயே வேலை செய்ய விரும்பவதை ஊக்குவிக்க முடியும்.

அத்துடன், ஒவ்வொரு நாளும் சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்லும் மலேசியர்களால் சுல்தான் அபு பக்கர் வளாகத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களையும் குறைக்க முடியும்.

ஜொகூர்ரில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அனைத்தையும் ஏற்படுத்திய பிறகு, அம்மாநிலத்தில் வர்த்தகம் புரிவதற்கான செலவுகள், அண்டை நாடான சிங்கப்பூருடன் ஒப்பிடுகளையில்,70 விழுக்காடு வரையில் குறைவானதாக இருக்கும் எனவும் ஓன் ஹஃபிஸ் நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

WATCH OUR LATEST NEWS