பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் இந்திய ஆண்கள் வில்வித்தை அணியானது காலிறுதிப் போட்டியில் 2-6 என்ற கணக்கில் துருக்கியிடம் தோல்வி அடைந்தது.
பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் தொடரானது கடந்த 26ஆம் தேதி தொடக்க விழாவுடன் தொடங்கி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில், 3ஆவது நாளான ஜூலை 29ஆம் தேதியான இன்று ஆண்களுக்கான வில்வித்தை காலிறுதி போட்டி நடைபெற்றது. இதில், தீரஜ் பொம்மதேவரா, தருண்தீப் ராய், பிரவீன் ரமேஷ் ஜாதவ் ஆகியோர் கொண்ட இந்திய ஆண்கள் அணியானது துருக்கி அணியை எதிர்கொண்டது.
இதில் முதல் 2 செட்டுகளை 53-57, 52-55 என்று துருக்கி கைப்பற்றியது. இதையடுத்து 3ஆவது செட்டை இந்திய அணி 55-54 என்று கைப்பற்றியது. கடைசியாக கடைசி செட்டை இந்திய அணி கைப்பற்றி தொடரை சமன் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த செட்டை இந்திய அணி 54-55 என்று இழந்து அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து காலிறுதி சுற்றுடன் வெளியேறியது.