கோலாலம்பூர், ஆகஸ்ட் 05-
கோலாலம்பூர், தேச மெலாட்டி, KLFA கால்பந்து மையத்தில் நேற்று நடைபெற்ற கால்பந்தாட்டத்தில், வாக்குவாதம் ஏற்பட்ட போது, கூர்மையான ஆயுதத்தை கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் கால்பந்து ஆட்டக்காரரை போலீசார் தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் இன்று அதிகாலை 2.21 மணியளவில் 23 வயது ஆடவர் ஒருவரிடமிருந்து போலீசார் புகார் பெற்று இருப்பதாக வங்சா மஜு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது லாசிம் இஸ்மாயில் தெரிவித்தார்.
அந்த கால்பந்தாட்டத் திடலில் புகார்தாரர் குழுவினரும் எதிர்தரப்பினரும் விளையாடிக்கொண்டு இருந்த போது, இரு குழுக்களின் ஆட்டக்காரர்கள் மத்தியில் தகராறு ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அப்போது எதிர்தரப்பு ஆட்டக்காரர் ஒருவர், ஓடிச்சென்று கூர்மையான ஆயுதத்தை எடுத்துக்கொண்டு திடலில் நுழைந்து, ஆயுத முனையில் தங்கள் ஆட்டக்காரரை அச்சுறுத்தியதாக அந்நபர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
தற்போது அந்த ஆட்டக்காரர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரை பிடிப்பதற்கு தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளதாக Aஏசிபி முகமது லாசிம் இஸ்மாயில் குறிப்பிட்டார்.
எனினும் இந்த தகராற்றில் யாரும் காயமடைவில்லை என்று அவர் விளக்கினார்.