ஒலிம்பிக் போட்டித்தொடரில் சாதனை படைத்த கனேடிய சிறுமி

பாரிஸ், ஆகஸ்ட் 06-

ஒலிம்பிக் (Olympic) போட்டித் தொடர் ஒன்றில் கனடாவின்(Canada) சார்பில் மூன்று தங்கப் பதக்கம் வென்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கனடாவின் ரொறன்ரோவைச் சேர்ந்த சம்மர் 17 வயது சிறுமியான சம்மர் மெக்கினோஸ்(Summer McIntosh) என்ற நீச்சல் வீராங்கனையே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.

நீச்சல் போட்டிகள்

இதுவரையில் மூன்று தங்கப் பதக்கங்களை எந்தவொரு கனேடியரும் ஒரே ஒலிம்பிக் தொடரில் வென்றதில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஒலிம்பிக் போட்டித்தொடரில் சாதனை படைத்த கனேடிய சிறுமி | A Canadian Girl Who Set A Record In The Olympics

இவர் 200 மீற்றர் மெட்லே, 200 மீற்றர் பட்டர்பிளை மற்றும் 400 மீற்றர் மெட்லெ ஆகிய நீச்சல் போட்டிகளில்  தங்கப் பதக்கம் வென்று சாதனைபடைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் போட்டித்தொடரில் சாதனை படைத்த கனேடிய சிறுமி | A Canadian Girl Who Set A Record In The Olympics

இதன்போது கனடாவிற்கு பெருமை சேர்க்க முடிந்தமை மகிழ்ச்சியளிப்பதாக சம்மர் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS