ஆகஸ்ட் 09-
இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தளத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்து செய்துள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
வெங்கட் பிரபு தயாரிப்பில் உருவான ’நண்பன் ஒருவன் வந்த பிறகு’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இந்த படத்தை நேற்று சிவகார்த்திகேயன் பார்த்தார்.

படம் பார்த்தவுடன் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது ’ரெமோ படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்த ஆனந்த்ராம், ’நண்பன் ஒருவன் வந்த பிறகு’ என்ற படத்தின் கதை எழுதி இயக்கி நடித்துள்ளார் என்றால் அவருடைய வளர்ச்சியை பார்த்து எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
நல்ல நண்பர்கள் இருந்தால் நம்முடைய வாழ்க்கை ஒளிமயமாக இருக்கும் என்பதை நான் அனுபவத்தில் வைத்துள்ளேன். அந்த வகையில் இந்த படத்தை பார்க்கும்போது என்னுடைய நட்பு வட்டாரத்தில் நடந்த சில நிகழ்ச்சிகள் ஞாபகம் வருகிறது. நீங்களும் இந்த படத்தை திரையரங்குகளில் பாருங்கள், கண்டிப்பாக இந்த படம் உங்கள் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளுடன் கனெக்ட் ஆகும்’ என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
