குவாந்தன்,ஆகஸ்ட் 12-
முதியவர் ஒருவர் பயணித்த MOTOJIP வாகனம், சாலை வளைவில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த டிரெய்லர் லோரியின் வால்பகுதியை மோதியதில் அந்நபர் பலத்த காயத்திற்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டார்.
இச்சம்பவம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் குவந்தான், ஜாலன் குவாந்தன் – கெமாமன் சாலையின் 47 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.
மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் குவந்தான்,சேரடிங்- கைச் சேர்ந்த 76 வயது வஹாப் ஜூசோ என்பவரே உயிரிழந்ததாக குவந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் முகமட் ஜஹாரி வான் புசு அடையாளம் கூறினார்.