ஜாஹித் ஹமிடி ஹீரோ ஒன்றும் அல்ல; அம்னோவைக் காப்பாற்றிவிட்டதாக அவர் மார்தட்டிக்கொள்ளக்கூடாது! துன் டாக்டர் மகாதீர் கூறுகின்றார்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 13-

நாட்டின் 14ஆவது பொதுத்தேர்தலுக்கு பின்னர், பக்காத்தான் ஹாராப்பான் ஆட்சிக்காலத்தின் போது, அம்னோவைத் தடை செய்ய தாம் முயற்சித்ததாக, தம்மீது அதன் தலைவர்டத்தூஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி முன்வைத்துள்ள குற்றச்சாட்டை, முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது திட்டவட்டமாக மறுத்தார்.

ஹீரோ போல தம்மை வீழ்த்தி, அம்னோவைக் காப்பாற்றிக்கொண்டதாக ஜாஹித் மார்தட்டிக்கொள்ளக்கூடாது. நீதிமன்ற வழக்கு விசாரணைகளிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக, அம்னோவின் பரம எதிரியான DAP கட்சியுடன் ஒத்துழைத்தவர் அவர் என மகாதீர் சாடினார்.

தாம் பிரதமராக இருந்த நேரத்தில்,ஜாஹித் தம்மை இரு முறை சந்தித்த போது, அம்னோ அதன் அடிப்படை போராட்டத்திலிருந்து விலகிவிட்டதால், அக்கட்சியைக் கலைக்க வேண்டுமென தாம் வலியுறுத்தியதை, அவர் அதனை ஏற்கவில்லை.

கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில், தாம் தோற்றுவித்த பெர்சாத்து கட்சியினர், தமது ஆலோசனையை பின்பற்ற தவறியதாலேயே, ஒரு தலைவராக கௌரவமான முறையில் தாம் பிரதமர் பொறுப்பிலிருந்து விலகியதாக மகாதீர் கூறினார்.

WATCH OUR LATEST NEWS