லஹாட் டது ,ஆகஸ்ட் 01
கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, தடம் புரண்டதில் அதன் ஓட்டுநர் உயிரிழந்த வேளையில் அவரின் இரு மகன்கள் படுகாயம் அடைந்தனர்.
இச்சம்பவம் நேற்றிரவு 10 மணியளவில், தவாவ், ஜாலான் டது – தவாவ் சாலையில் நிகழ்ந்தது. இதில் Rey Davila என்ற 54 வயது நபர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக அடையாளம் கூறப்பட்டது.
அவரின் 20 மற்றும் 27 வயது இரு மகன்கள் கடும் காயத்திற்கு ஆளாகி, லஹாட் டது மருத்துவமனையின் அவசரப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.