செபாங் , செப்டம்பர் 02-
மலேசியாவிற்கு மூன்று நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ள நியூசிலாந்து பிரதமர் Chiristopher Luxon-க்கு புத்ராஜெயா, டதரன் பெர்டானா சதுக்கத்தில் மகத்தான வரவேற்பு நல்கப்பட்டது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நியூசிலாந்தின் பிரதமராக பொறுப்பேற்ற Chiristopher Luxon, மலேசியாவிற்கு மேற்கொண்டுள்ள முதலாவது வருகையாகும்.
இன்று காலை 9.30 மணியளவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் டதரன் பெர்டானா -வை வந்தடைந்த Chiristopher Luxon- க்கு மேஜர் கைருல் ஃபக்ஸான் ஜைனோல் ஆபிதீன் தலைமையில் அரச மலாய் இராணுவப் பட்டாளத்தைச் சேர்ந்த 103 வீரர்கள் மற்றும் மூன்று அதிகாரிகள் வழங்கிய மரியாதை அணிவகுப்பை பார்வையிட்டார்.
பின்னர் மலேசியாவிற்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான இரு வழி உறவு தொடர்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருடன் Chiristopher Luxon பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.