குளுவாங்,செப்டம்பர் 06-
பள்ளி பேருந்தில் மாணவி ஒருவரை வீடியோ படம் எடுத்ததாக கூறப்படும் அதன் ஓட்டுநர், விசாரணைக்கு ஏதுவாக 5 நாள் தடுப்புக்காவலில் வைப்பதற்கு போலீஸ்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
24 வயதுடைய அந்த பேருந்து ஓட்டுநர், இன்று காலையில் பத்து பஹாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, தரடுப்புக்காவலுக்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பஹ்ரின் முகமது நோ தெரிவித்தார்.
அந்த பேருந்து ஓட்டுநர் இன்று காலையில் குளுவாங், சிம்பாங் ரெங்கம்- மில் கைது செய்யப்பட்டார். அவரை வரும் செப்டபம்ர் 10 ஆம் தேதி வரையில் தடுத்து வைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட நபரின் செயல் தொடர்பான காணொளி, டிக் டோக் சமூக லைத்தளத்தில் வரைலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.