ஈப்போ , செப்டம்பர் 12-
பழுதடைந்த டிரெய்லர் லோரியில் பழுது நீக்குப்பணியை மேற்கொண்டு இருந்த மெக்கானிக் ஒருவர் வாகனத்தின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி மரணமுற்றார்.
இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை அதிகாலை 1.35 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 286.6 ஆவது கிலோமீட்டரில் ஈப்போவிற்கு அருகில் நிகழ்ந்தது.
இதில் முகமது மரினூர் சிக் என்ற 60 வயது மெக்கானிக், கடும் காயங்களுக்கு ஆளாகி மரணமுற்றதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் ஜைனல் அபிதீன் அபாங் தெரிவித்தார்.
லோரியின் முன்புறம் தனது வேனை நிறுத்திவிட்டு, லோரியில் மெக்கானிக் பழுது பார்த்துக்கொண்டு இருந்த போது, அங்கே மற்றொரு வேனில் அவரின் நண்பர் வந்துள்ளார்.
எதிர்பாராமல் வேனை வேகமாக பின்னோக்கி நகர்த்திய போது, மெக்கானிக்கை மோதி, இடிபாடுகளுக்கு மத்தியில் சம்பவ இடத்திலேயே மாண்டார் என்று ஏசிபி அபாங் ஜைனல் குறிப்பிட்டார்.