தளபதி விஜய் நடிப்பில் உருவான ‘கோட்’ திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியான நிலையில் தற்போது, இப்படத்தின் 13 நாட்களின் வசூல் பற்றிய அதிகாரப்பூர்வ தகவலை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த தகவல் இணையத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.
‘கோட்’ திரைப்படம் வெளியான முதல் நாளில் 126 கோடிக்கும் மேற்பட்ட வசூலை கொட்டியது. இதை தொடர்ந்து, படத்தின் இந்த படத்தின் வசூல் குறித்து அவ்வப்போது படத்தயாரிப்பு நிறுவனம் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறது.

இந்த நிலையில் ‘கோட்’ வெளியாகி 13 நாட்கள் முடிவில், மொத்தம் 413 கோடி ரூபாய் வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதனை விஜய் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இதற்கு முன்னர், விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ திரைப்படமும் 400 கோடிக்கும் மேற்பட்ட வசூலை நிலையில் அடுத்தடுத்து விஜய்யின் இரண்டு படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
