ஜெயா ஷர்மா- வை சிங்கப்பூர் நிறுவனம் நம்பவில்லை

சிங்கப்பூர் , செப்டம்பர் 19-

கொடுத்தப் பணத்தை திரும்ப கேட்டதற்காக பொய் புகார் செய்ததாக கூறப்படும் கிள்ளானைச் சேர்ந்த ஓர் இந்திய தம்பதியருக்கு எதிராக போலீஸ் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் சித்தியவான், ரக்ஷா மெட்டல் நிறுவனத்தின் வர்த்தக சகாக்கள், அந்த நபர், சிங்கப்பூரில் நடத்திய மோசடி வேலையை அம்பலப்படுத்தியுள்ளனர்.

சிங்கப்பூரிலிருந்து பழைய இரும்புப்பொருட்களை வாங்குவதற்கு கிட்டத்தட்ட 30 லட்சம் வெள்ளி மதிப்பிலான திட்டத்தை தங்களிடம் ஏற்படுத்திக்கொடுப்பதற்கு கிள்ளானைச் சேர்ந்த ஜெயா ஷர்மா என்ற நபர், தங்களை சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்றதாக ஐவரை உள்ளடக்கிய ரக்ஷா மெட்டல் நிறுவனத்தின் வர்த்தக சகாக்களில் ஒருவரான விக்னேஸ்வரராவ் ரவீந்திரன் தெரிவித்தார்.

சிங்கப்பூருக்கு தங்களை இரண்டாவது முறையாக அழைத்து சென்ற ஜெயா ஷர்மா, முதல் சம்பவத்தில் ஒரு தவறு நடந்து விட்டது. இரண்டாவது முறையாக இந்த வர்த்தக கொள்முதலை எப்படியாவது எடுத்து தந்து விடுகிறேன் என்று கூறி எங்களை சிங்கப்பூருக்கு கொண்டு சென்றார்.

சிங்கப்பூருக்கு சென்றதும், அங்குள்ள சூழ்நிலையை பார்க்கும் போது சிங்கப்பூர் நிறுவனம், ஜெயா ஷர்மா மீது நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்பது தெரியவந்தது.

நம்பிக்கையில்லாத பட்சத்தில் அந்த சிங்கப்பூர் நிறுவனத்திற்கு ஜெயா ஷர்மா செலுத்திய சிங்கப்பூர் பணம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் வெள்ளியை அந்த நிறுவனம் அவரிடம் திருப்பி செலுத்தி, இந்த குத்தகையை ரத்து செய்தது.

இதில் ஜெயா ஷர்மா- விடம் தாங்கள் செலுத்திய ஒரு லட்சத்து 30 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் பணத்தில் அவர், மலேசிய ரிங்கிட்டில் 4 லட்சத்து 25 ஆயிரம் வெள்ளியை தங்களிடம் தந்ததாக விக்னேஸ்வரராவ் தெரிவித்தார்.

சிங்கப்பூர் நிறுவனத்தின் நம்பிக்கையை இழந்த ஜெயா ஷர்மா, ஒரு நம்பிக்கையான நபர் அல்ல என்பதை அந்த சிங்கப்பூர் நிறுவனம் அன்றே நன்கு புரிந்து வைத்திருந்தது என்று அன்று சிங்கபூரில் நடந்த உண்மையை வெட்ட வெளிச்சமாக்கினார் விஜி, கிரீஸ், குணா மற்றும் மஹா ஆகிய வர்த்தக சகாக்களை கொண்டுள்ள விக்னேஸ்வரராவ் விளக்கினார்.

சிங்கப்பூரிலிருந்து பழைய இரும்புப்பொருட்களை கொள்முதல் செய்வதற்கு ஜெயா ஷர்மா – விற்கு தாங்கள் செலுத்திய 15 லட்சம் வெள்ளியில், எஞ்சியத் தொகையான 4 லட்சத்து 57 ஆயிரத்து 500 வெள்ளியை அவரிடமிருந்து திரும்ப பெறும் முயற்சியில் தாங்கள் ஈடுபட்டதாக விக்னேஸ்வரராவ் தெரிவித்தார்.

இந்நிலையில் ஜெயா ஷர்மா –வை தாங்கள் கடத்த முயற்சி செய்ததாகவும், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி, தங்களுக்கு எதிராக பொய் புகார் செய்து,/ சட்டத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார் என்பதற்கு தங்களிடம் போதுமான ஆதாரங்கள் இருப்பதாக விக்னேஸ்வரராவ் குறிப்பிட்டுள்ளார்.

எனவே ஜெயா ஷர்மா மற்றும் அவரின் மனைவி ஆகியோருக்கு எதிராக போலீஸ் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விக்னேஸ்வரராவ் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

Caption

விக்னேஸ்வர ராவ் ரவீந்திரன்,
வர்த்தக சகா, ரக்ஷா மெட்டல்

WATCH OUR LATEST NEWS