பத்து பஹாட் , செப்டம்பர் 21-
பத்து பஹாட் – யில் இன்று அதிகாலை யோங் பெங் – கின் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் (Plus) 91.4 கிலோமீட்டர் பகுதியில் விரைவுப் பேருந்து கவிழ்ந்து பள்ளத்தில் நுழைந்ததில் பேருந்து ஓட்டுநர் மற்றும் நான்கு பயணிகள் காயமடைந்தனர்.
யோங் பெங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் (BBP) செயல்பாட்டுத் தளபதி, தீயணைப்பு அதிகாரி முஹம்மது ஃபர்ஹான் அகமது , இந்த விபத்து அதிகாலை 3.56 மணியளவில் நடந்தது என்று கூறினார். சம்பவம் தொடர்பான அவசர அழைப்பு வந்த எட்டு நிமிடங்களுக்குப் பிறகு, அதிகாலை 4:04 மணியளவில் தீயணைப்புப் படை அந்த இடத்திற்குச் சென்றனர்.
அவர்களுக்கு இரண்டு தீயணைப்பு மீட்பு டெண்டர் (FRT) இயந்திரங்கள் மற்றும் ஒரு அவசர சேவை உதவிப் பிரிவும் உதவியதாக கூறினார். உடனடியாக சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி கண்ணாடியை வெட்டி அனைத்து 11 பயணிகளையும் கண்ணாடியின் மூலம் அகற்றப்பட்டனர். மேலும், பஸ் ஓட்டுநர் மற்றும் நான்கு பயணிகள் என ஐந்து பேர் காயமடைந்துள்ளார்கள். அவர்களுக்கு மருத்துவ பணியாளர்கள் உடனடி சிகிச்சை அளித்தனர்.