ஒலிம்பிக் – டென்னிஸ் : முதல் முறையாக தங்கம் வென்றார் ஜோகோவிச்.. 37 வயதில் சாதனை! அல்காரஸ்க்கு வெள்ளி

அக்டோபர் 04-

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் டென்னிஸ் ஆடவர் இறுதி போட்டியில் செர்பிய நாட்டை சேர்ந்த உலகின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்திருக்கிறார். இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் ஜோகோவிச் முதல்முறையாக தங்கம் வென்று அசத்தியிருக்கிறார்

அது மட்டுமல்லாமல் ஒலிம்பிக் தொடரில் டென்னிஸ் போட்டியில் தங்கப்பதக்கம் என்ற வயதான வீரர் என்ற பெருமையும் ஜோகோவிச்சுக்கு சேர்த்தது. 24 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள நோவக் ஜோகோவிச் தற்போது ஒலிம்பிக்கில் தங்கத்தையும் கைப்பற்றி இருப்பதால் கோல்டன் ஸ்லாம் வென்ற அந்தஸ்தைப் பெற்ற மூன்றாவது வீரர் என்ற சாதனையும் படைத்திருக்கிறார்.

பாரிசில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஜோகோவிச் அல்காரஸ் பல பரிட்சை நடத்தியது. ஸ்பெயின் வீரர் அல்காரஸ் உடன் ஜோகோவிச் அண்மையில் நடந்த விம்பிள்டன் இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவினார். இந்த நிலையில் இதற்கு பழித் தீர்க்கும் உத்வேகத்துடன் ஜோகோவிச் இன்று விளையாடினார்.

37 வயதான ஜோகோவிச் இதுவரை ஒலிம்பிக் வரலாற்றில் 2008 ஆம் ஆண்டு வெண்கல பதக்கம் மட்டுமே வென்றிருக்கிறார்.ஜோகோவிச் டென்னிஸ் வாழ்க்கையில் தங்கம் மட்டும் தான் அவர் வெல்லாமல் இருந்திருந்தார். தற்போது எப்படியாவது நாட்டுக்காக பதக்கத்தை வெல்ல வேண்டும் என பேய் பிடித்தது போல் ஜோகோவிச் இன்று விளையாடினார். அல்காரஸ் இளம் வீரர் என்பதால் தன்னுடைய ஆக்ரோஷத்தையும் வேகத்தையும் கலந்து ஜோகோவிச்சுக்கு சவால் அளித்தார்.

எனினும் நாட்டுக்காக ஒரு தங்கப் பதக்கத்தையாவது வெல்ல வேண்டும் என்ற வெறியில் இருந்த ஜோகோவிச், தன்னுடைய அனுபவம், உடல், பொருள்,ஆவி என அனைத்தையும் கலந்து டென்னிஸ் களத்தில் புயல் போல் சுழன்று சுழன்று பந்தை அடித்தார். இதனால் முதல் செட் முடிவதற்குள்ளே ஒன்றரை மணி நேரம் ஆகிவிட்டது. சுமார் 2:30 மணி நேரம் நீடித்த இந்த போட்டியில் ஜோகோவிச் ஏழுக்கு ஆறு, ஏழுக்கு ஆறு என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டி சென்றார்.இதன் மூலம் ஸ்பெயின் வீரரான அல்காரஸ்க்கு வெள்ளி பதக்கமே கிடைத்தது.

WATCH OUR LATEST NEWS