மூவார் ,அக்டோபர் 08-
வீடு ஒன்றில் அத்துமீறி நுழைந்து, வயது குறைந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக மூன்றாம் படிவ மாணவன் ஒருவன், ஜோகூர், மூவார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டான்.
மாஜிஸ்திரேட் சுசானா மொக்தார் முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த மாணவனுக்கு எதிரான குற்றச்சாட்டு மொழிப்பெயர்ப்பாளரின் உதவியுடன் வாசிக்கப்பட்டது.
கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி காலை 9 மணியளவில் மூவார் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் 15 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக அந்த மாணவனுக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து அந்த மாணவன் விசாரணை கோரியதால் அவனை 5 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்தது.
இருப்பினும் அந்த மாணவனின் குடும்ப உறுப்பினர்கள் யாரும் அவனை ஜாமீனில் எடுப்பதற்கு முன்வராததால் அவனை மூவார் சீர்த்திருத்தப்பள்ளி தடுப்பு மையத்திற்கு கொண்டு செல்லும்படி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.