பிரபல டிக் டாக் பிரலமான டெய்லர் ரூசோ என்ற பெண் தனது 25 வயதிலேயே காலமாகியிருப்பது அவரது பாலோவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
அமெரிக்காவை சேர்ந்த பிரபல டிக் டாக் பிரலமான டெய்லர் ரூசோ என்ற பெண் தனது 25 வயதிலேயே காலமாகியிருப்பது அவரது ஃபாலோவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிக்டாக்கில் 1.4 மில்லியன் பாலோவர்களை கொண்டுள்ளார் டெய்லர்ரூசோ.. தனது டிக்டாக் பக்கத்தில்,ஷாப்பிங் டிப்ஸ், டிசைனிங் ஐடியா, லைப் ஸ்டை போன்ற பதிவுகளை இடுவது வழக்கம்..
மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த டெய்லர் ரூசோவின் வாழ்வில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதி மற்றொரு மகிழ்ச்சிதரும் தருணம் அரங்கேறியுள்ளது. அதுதான், டெய்லர் ரூசோவிற்கு அவரது காதலரான கேமரூனுக்குமான திருமணம்.
இந்தநிலையில்தான், டெய்லர் ரூசோவின் கணவரான கேமரூன், தீடீரென அதிர்ச்சியளிக்ககூடிய பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில், மனைவியின் புகைப்படத்தை வெளியிட்ட அவர், ,’ டெய்லர் ரூசோ அவரது 25 வயதில் இறைவனின் அடி சேர்ந்துவிட்டார் ’ என்ற செய்தியையும் டெய்லர் அனுபவித்த கஷ்டங்களையும் மனம் கலங்கி பதிவிட்டுள்ளார்.. ஆனால், மரணத்திற்கான காரணம் என்னவென்று அறிவிக்கவில்லை.
து குறித்த பதிவில், “ குறிப்பாக எங்கள் வயதில் இதுபோன்ற வலியும் மன வேதனையும் ஏற்படுமா? என்று யாரும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள்..
நாங்கள் திருமணம் செய்து கொண்டதிலிருந்தே டெய்லர் மருத்துவமனையில் உள்ளேயும் வெளியேயும்தான் இருக்கிறார். எங்களிடம் நிதியும் இல்லாமல் போனது. எனவே, டெய்லருக்காக gofundme தொடங்கப்பட்டு நிதி பெறப்பட்டது.